கிணற்றில் விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழப்பு
#SriLanka
#Hospital
Kanimoli
2 years ago

இன்றையதினம்,இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளது. குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில் தாயார் சமையல் வேலைகளை செய்துகொண்டிருந்தார்,
இதன்போது அருகில் உள்ள வீட்டு கிணற்றினுள் குழந்தை விழுந்துள்ளது. இதன்போது குழந்தை மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி ரக்ஸிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.



