பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க முயற்சிக்கும் அரசாங்கம்! சஜித்

#SriLanka #Parliament #Sajith Premadasa
Mayoorikka
2 years ago
பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க முயற்சிக்கும் அரசாங்கம்! சஜித்

பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த போதிலும், அத் தீர்மானத்தை எடுப்பதில் தொடர்பில் தெரிவுக்குழுவை ஒத்திவைத்ததாலும், தெரிவுக்குழுவை நடத்தாது விட்டமையினாலும் சட்டவிரோத தலைவர்கள் நியமிக்கப்பட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 வங்குரோத்தான நாட்டின் நிதி விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதுதான் நாட்டில் பிரதான விடயமொன்றாலும், இங்கு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு எதிர்க்கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் எனவும், நிதிக்குழுத் தலைவர் பதவியை வழங்காமல் பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சுக்களை பெற எதிர்க்கட்சியில் எவரும் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வா அவர்களின் பெயர் எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்டிருக்கும் போது, எக்காரணத்திற்காக அந்நியமனத்தை மேற்கொள்ளாதிருப்பதாக நாட்டுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

 மேலும் முறையாக நியமிக்கப்பட்ட தலைவர் ஒரைவர் இல்லாத நிலையில், தற்காலிக தலைவர் மூலம் எவ்வாறு சட்ட விதிமுறைகளை நிறைவேற்ற முடியும்? என்ற ஒரு பிரச்சினை நிலவுவதாகவும், ஹர்ஷ டி சில்வா சரியான நிலைப்பாடுளை மேற்கொள்வதால் சில அரசியல்வாதிகள் பொறாமை கொள்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!