மூன்று மருத்துவமனைகளில் இருந்து 13 கண் நோயாளிகள் கண்டறியப்பட்டனர் - இந்திய மருந்துகளை பயன்படுத்திய பின் ஏற்படும் சிக்கல்கள் !

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசோலோன்’ என்ற கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் சிக்கல்களை உருவாக்கிய 13 கண் நோயாளிகளை சுகாதார அமைச்சகம் இதுவரை கண்டறிந்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க இந்த விடயத்தை தெரிவித்தார்.
குறித்த நோயாளிகளில், இரண்டு நோயாளிகளின் பார்வை குறைந்துள்ளது, மற்றவர்களின் பார்வை பலவீனமடைந்துள்ளது, என டாக்டர் விக்கிரமநாயக்க கூறினார்.
இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பத்து நோயாளிகளும் தேசிய கண் வைத்தியசாலையில் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
டாக்டர் குணவர்தனவின் கூற்றுப்படி, இது மருத்துவத்தில் காணப்படும் ஒரு பிரச்சினை காரணமாகும். "எனவே, இந்த சம்பவம் குறித்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.



