யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

#SriLanka #Robbery
Kanimoli
2 years ago
யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாண நகரில் அண்மைய நாட்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள்தெரிவிக்கின்றன யாழ். நகர்ப்புற பகுதியில் வீதிகளில், வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்வோர் மோட்டார் சைக்கிள்களில் திறப்பினை விட்டு செல்லும் மோட்டார் சைக்கிள்களை அவதானித்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் கும்பல் எரிபொருள் தாங்கியில் இருக்கும் எரிபொருள் முடியும் வரை மோட்டார் சைக்கிளை ஓடிவிட்டு ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் நிறுத்தி விட்டு செல்லும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன.

 கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் மூன்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். எனவே யாழ்ப்பாண நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் களை திறப்பு எடுக்காமல் நிறுத்தி செல்ல வேண்டாம் எனவும் மோட்டார் சைக்கிள் திறப்பினை கையுடன் எடுத்துச் செல்லுமாறும் அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!