உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு பணம் செலுத்தும் வார்டு வசதிகள்..
#SriLanka
#Tamil People
#Lanka4
#Foriegn
Prabha Praneetha
2 years ago
உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி சமர்ப்பித்த 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணையின் போது இதேபோன்ற பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
மேலும் , அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்கெனவே ‘அக்ரஹாரா’ மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .