மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

#SriLanka #Arrest #drugs
Prasu
2 years ago
மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபா மதிப்பிலான  போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் பணத் தொகையுடன் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் ஒரு தொகைப் பணம் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 நீண்டகாலமாக பாரியளவில் ஐஸ் போதைப்பொருள் விநியோகம் செய்து வரும் சந்தேக நபர் தொடர்பில் விசேட அதிரடிப்படை கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை மேற்கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!