மே முதல் வாரத்தில் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவு - மக்களுக்கு கடும் எச்சரிக்கை !
#SriLanka
#people
#Tamilnews
#Dengue
Prabha Praneetha
2 years ago

இம்மாத மே முதல் வாரத்தில் இலங்கையில் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும் , கடந்த மாதத்தின் இறுதி வாரத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் முதல் வாரத்தில் கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



