எனது மகள் எவருடனும் காதல் வயப்பட்டிருக்கவில்லை - களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் தாயாரின் வாக்குமூலம்
எனது மகள் யாருடனும் , காதல் வயப்படவில்லை என தான் உறுதியாக நம்புவதாக, களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் தாய் ஊடகங்களிடம் கூறியுள்ளார் .
எனது பிள்ளைக்கு காதல் தேவை இல்லை என களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் 16 வயதுடைய சிஹாரா நிர்மாணி என்ற சிறுமியின் தாயார் டபிள்யூ.ஏ.நெலுகா தெரிவித்துள்ளார் .
களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் அவரை அழைத்துச்சென்ற நபர் உட்பட மூவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அறிமுகம் இல்லாத ஒரு பாவியால் எனது மகளின் உயிர் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளால், எமது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்