அரசு வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறை வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
#SriLanka
#Bandula Gunawardana
#srilankan politics
Kanimoli
2 years ago

அரசு வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறை வசதியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டண செலுத்தும் சிகிச்சை அறைகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.



