சர்வதேச செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை(ICRC) நிறுவிய மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபரான ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் மே 8ம் திகதி உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் கொண்டாடப்படுகிறது.
அதனடிப்படையில், சர்வதேச செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளையினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி வலயக் கல்வி பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்ற தெரிவு செய்யப்பட 60 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை மாவட்ட பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது சிறுவர்களுக்கான முதலுதவி மற்றும் அனர்த வேளைகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் போன்ற திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான செய்முறை ரீதியான பயிற்சிகள் வழங்கப்படன. மேலும் முதலுதவி பயிற்சி பட்டறையின் நிறைவில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், குறித்த முன்பள்ளிகளுக்கான முதலுதவிப் பெட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமணை முன்பள்ளி உதவிப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்க கிளை ஆளுநர்சபைஉறுப்பினர்கள் தொண்டர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன்.மரநடுகை .வீதியோரதிண்மக்கழிவுஅகற்றல்.உற்பட
பல செயற்பாடுகள் இடம்பெற்றன.
9.5.2023 இன்று கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 40 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



