2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

#SriLanka #Election #Lanka4 #President #Tamilnews #sri lanka tamil news
Prathees
2 years ago
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

 75 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதார நிலையை கட்டுப்படுத்தும் முன்னுதாரணத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றும் கொள்கைகளை தாம் முன்வைப்பதாக அவர் கூறினார்.

 இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய எந்தவொரு குழுவும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 மதத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் காரணமாக 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!