மின்கட்டணங்கள் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட தகவல்!
#SriLanka
#Electricity Bill
Mayoorikka
2 years ago
மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வருட மின்சாரத் தேவையை மிகைப்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை மின்சாரசபை உயர்த்தியதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அப்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி 35 சதவீதத்தால் மட்டுமே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தால், மக்கள் இவ்வளவு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.