கிளிநொச்சியில் அதிகரிக்கும் இராணுவ அடக்குமுறை!

#SriLanka #Kilinochchi #Sri Lankan Army #sritharan
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் அதிகரிக்கும் இராணுவ அடக்குமுறை!

கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான அரச மற்றும் தனியார் காணிகளை படையினர் தொடர்ந்து சம்பவம் வைத்திருக்கும் வரை நகரத்தின் அபிவிருத்தியில் எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நகரத்தில் இவ்வாறு அதிகளவான காணிகள் படையினர் வசம் இருப்பது என்பது இராணுவ அடக்கு முறையை சித்தரிக்கிறது என்று தெரிவித்தார்.

 கிளிநொச்சி நகரத்தின் நகர அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

 “கிளிநொச்சி நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டிப்போ சந்தியில் உள்ள காணியினை படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன் அதனை இரானுவத்தினர் தன்னிச்சையாக அளவீடு செய்துள்ளனர்.

 அதாவது அளவீடு செய்யப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளருக்கோ அல்லது மாகாண காணி ஆணையாளருக்கோ தெரியாது. இங்கு இராணுவ நிர்வாகமே நடைபெறுகின்றது என்பதை காட்டி நிற்கின்றது.

 குறிப்பாக நகரத்தில் அதிக மக்கள் பயன்படுத்துகின்ற டிப்போ சந்தியில் ஒரு சுற்றுவட்ட பாதையை கூட அமைக்க முடியாத அளவுக்கு காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது.

 அதேபோல கிளிநாச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான காணிகள் இன்றும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. ஏ-09 வீதியின் அறிவியல் நகர் முதல் ஆனையிறவு வரைக்குமுள்ள அதிகளவான அரச மற்றும் தனியார் காணிகள் இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!