GSP+ வரிச்சலுகை தொடர்பான புதிய விதிமுறைகள் நாளை அறிவிக்கப்படும்

#SriLanka #Lanka4 #European union #sri lanka tamil news #Foriegn
Prathees
2 years ago
GSP+ வரிச்சலுகை தொடர்பான புதிய விதிமுறைகள் நாளை அறிவிக்கப்படும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகை தொடர்பான புதிய விதிமுறைகள் நாளை (09) அறிவிக்கப்பட உள்ளன. 

 ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இந்த அமர்வு நாளை வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. 

 அதில், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் வெளி நடவடிக்கை சேவையின் ஆசிய பசிபிக் துணை நிர்வாக இயக்குனர் திருமதி பாவோலா பாம்பலோனி பங்கேற்கவுள்ளார். 

 வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேதிலக, இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார் என அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!