இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவித்தல் - வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுமா?
#Colombo
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையிலும் , வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது .
குறித்த விடயத்தை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் இரு பிரதான நிறுவனங்கள் விலையினை அதிகரிக்காத நிலையில், வெதுப்பக உரிமையாளர்கள் சங்கமும் விலையினை அதிகரிக்கப் போவதில்லை என்றும்,கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களிடமிருந்தும் 215 மற்றும் 210 ரூபாவிற்கு ஒரு கிலோகிராம் கோதுமை மா கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



