உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் முக்கிய அறிவித்தல் - மேலும் அதிகரிக்கும் சீனி மற்றும் கோதுமைமாவின் விலை!!
#prices
#Wheat flour
#taxes
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

நாட்டில் , கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது .
அந்தவகையில் , கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆகையால் , கோதுமைக்கான இறக்குமதி வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து , குறித்த கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மற்றும் , உலக சந்தையில் வெள்ளை சீனி மெட்ரிக் டொன் ஒன்றின் விலை 500 அமெரிக்க டொலர்களில் இருந்து 750 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



