சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழியச் சிறை

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், பிரதிவாதிக்கு 5,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவிட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு.தமித் தோட்டவத்த இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் அயலிலுள்ள சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதற்காக இந்த பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.அதன் பிறகு இந்த தண்டனைகள் அறிவிக்கப்பட்டன.



