வசந்த கரணகொட மீது அமெரிக்காவின் தடை: பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்பு

முன்னாள் வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரணகொட மீது அமெரிக்கா விதித்த தடை குறித்து பிரித்தானிய தமிழர் பேரவை தனது நன்றியை தெரிவித்துள்ளது.
வசந்த காரணகொட பதவிக் காலத்தில் இருந்த பொழுது தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு மனிதவுரிமை மீறல் குற்றச் செயல்களில் ஈடுப்படிருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா வசந்த கரணகொட மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையிலேயே பிரித்தானிய தமிழர்கள் பேரவை பேரவை அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
2009 மே இல் உச்சக்கட்டத்தை அடைந்த யுத்தத்தில், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நடந்துகொண்ட ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா அரசாங்கங்களுக்கு எங்களின் நேர்மையான பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பட்டியலை மீண்டும் வலியுறுத்துவது புத்திசாலித்தனமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



