10 நோயாளர்களின் கண்ணை காவிய சம்பவம் - இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமியா?

கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது.
கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ளதால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.



