2019ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் வறுமை மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நாட்டில் வறுமை மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, இது வரையில் இந்த நாட்டில் வறுமை மற்றும் குழந்தைகளின் சுகாதார நிலை குறித்து முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 43 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டில் போசாக்கின்மை, கல்வியின்மை, சுகாதாரமின்மை போன்றவற்றால் அவதிப்படும் ஒரு தலைமுறை குழந்தைகள் பிறப்பது நாட்டின் எதிர்காலத்தை அதலபாதாளத்தில் விழச்செய்யும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.



