கிளிநொச்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உணவின்மை பிரச்சினையால் பாதிப்பு!

#SriLanka #Kilinochchi #Food #economy
Mayoorikka
3 years ago
கிளிநொச்சியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உணவின்மை பிரச்சினையால் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 313 குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு, உணவின்மை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவையாக காணப்படுகின்றன.

 இந்நிலையில் குறித்த மாவட்டத்தில் 7,313 குடும்பங்கள் உணவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன. 

 குறிப்பாக, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 4,050 குடும்பங்களும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 1,546 குடும்பங்களும், பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் 390 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 1,327 குடும்பங்களும் உணவு நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

 அத்துடன், கரைச்சியில் 5 வயதுக்குட்பட்ட 54 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 1,234 சிறுவர்களும், கண்டாவளையில் 5 வயதுக்குட்பட்ட 180 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 704 சிறுவர்களும், பூனகரியில் 5 வயதுக்குட்பட்ட 261 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 507 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட 73 சிறுவர்களும், 5 முதல் 16 வயது வரையான 320 சிறுவர்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 அத்துடன், மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 318 வரையான கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4