மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர்

#Murder #Pakistan #GunShoot #Terrorist
Prasu
2 years ago
மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர்

காலிஸ்தான் கமாண்டோ படை- பஞ்ச்வார் குழுவின் தலைவர் பஞ்வார் (63). ஜூலை 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இவர், லாகூரில் உள்ள தனது வீட்டு அமைந்துள்ள ஜனஹர் டவுனில் சன் ஃப்ளவர் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பூங்காவில் தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, மோட்டார் பைக்கில் வந்த இரு ஆசாமிகள் பஞ்ச்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

ISI, ராணுவ உளவுத்துறை (எம்ஐ) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) உள்ளிட்ட பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. 

பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!