நிர்வாணமாக மீட்கப்பட்ட 16 வயது மாணவியின் சடலம்: மூன்றாவது மாடியில் குதித்தாரா? அல்லது காதலனால் தள்ளிவிடப்பட்டாரா?

களுத்துறை காலி வீதியின் பிரதான வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று (6) மாலை நிர்வாணமாக பெண் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஐந்து மாடி தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததை அவதானித்த பொலிசார் தங்குமிடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் தரவுகள் உரிய விடுதியில் காணப்பட்டதுடன், அவர் களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடையவர்.
நேற்று முன்தினம், விடுதியின் இரண்டு அறைகளில் இரண்டு ஜோடிகள் வந்து தங்கியிருந்ததாகவும், சிறுமியும் மற்றொரு இளைஞனும் ஜோடியாக வந்ததாகவும் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, காணாமல் போன சிறுமி பாடசாலை மாணவி என்றும், நேற்று வேறு ஏதோ சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் என்றும் தெரிய வந்தது.
ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளம் தம்பதிகள் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் சிறுமியுடன் அறையில் இருந்த இளைஞன் அவர்கள் இருந்த இடத்தை விட்டு ஓடிச் சென்று தற்போது காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றாவது மாடியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இளைஞன் சிறுமியை மேலிருந்து கீழே தள்ளியிருக்கலாம் அல்லது மேலிருந்து குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமியுடன் வந்த இளைஞனைக் கண்டுபிடித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



