கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

#SriLanka #Wheat flour #Export #Ranjith Siambalapitiya
Kanimoli
2 years ago
கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது - ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஜனவரியில் கோதுமை மா மாவுக்கான சுங்க இறக்குமதி வரி கிலோவுக்கு 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 புதிதாக எடுக்கப்பட்டுள்ள முடிவை நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர், மாதம் அப்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு நடைமுறையில் இருந்த 36 ரூபா என்ற ஒருங்கிணைந்த வரியை, வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் என்ற விசேட பண்ட வரியாக மாற்றியது. இந்நிலையில், இந்த வரி விலக்கு நீக்கப்பட்டதையடுத்து, கோதுமை மாவின் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!