முன்பள்ளிச் சிறுவர்களுக்கு உயர் போஷாக்கு பிஸ்கட்களை வழங்க திட்டம்

சிறு குழந்தைகளின் போசாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர் போஷாக்குடன் கூடிய பிஸ்கட் வகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
“முன்பள்ளிக் குழந்தைகளுக்கு உயர் ஊட்டச் சத்து பிஸ்கட் வழங்கும் திட்டமாக இப்போதுதான் தொடங்கினோம், அதற்கான அனைத்தையும் தயார் செய்து, அடுத்த மாதத்திற்குள் விநியோகம் செய்வோம்.
மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்தான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



