அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஷாப்பிங் மாலில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
அவர்களில் 5 வயது குழந்தையும் உள்ளதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.



