5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
#Badulla
#Kegalle
#Lanka4
#sri lanka tamil news
#kurunagala
#Disaster
#Land_Slide
Prathees
2 years ago

நாட்டின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை, பதுளை, குருநாகல், கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படிஇ இன்று (07) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
பதுளை மாவட்டத்தில் பசர பிரதேசத்திலும், காலி மாவட்டத்தில் நாகொட, எல்பிட்டிய, பத்தேகம, யக்கலமுல்ல,
கேகாலை மாவட்டத்தில் அண்டர்பாஸ், ரம்புக்கன, தெரணியகல, மாவனல்லை, கேகாலை, கலிகமுவ ஆகிய பிரதேசங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாவத்தகம, அலவ்வா, பொல்கஹவெல மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல ஆகிய பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



