உரம் வாங்க விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது?

கடந்த பருவத்தில் உர கொள்வனவுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தில் 05 வீதமான விவசாயிகளே உரங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு கூறுகிறது.
2022 மற்றும் 2023 பருவத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 08 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு 10,000 ரூபாவும் 02 ஹெக்டேயருக்கு 20,000 ரூபாவும் வழங்கப்பட்ட பணத்தில் சுமார் 05 வீதமான விவசாயிகளே உரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விவசாய அமைச்சு 36,000 மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்த போதிலும், மொத்த தொகையில் 05 வீதமே விவசாயிகளால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



