வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு பணிப்பு

#SriLanka #Sri Lanka President #Governor #Ranil wickremesinghe
Kanimoli
2 years ago
வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு  பணிப்பு

வடமேற்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர். இதன்படி, இந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

 இதேவேளை லண்டனில் நேற்று இடம்பெற்ற பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!