தொற்று நோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை
#SriLanka
#weather
#Fever
#Virus
Prabha Praneetha
2 years ago

மழையுடனான வானிலையுடன் தொற்று நோய்களும் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்புளூவென்சா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய தொற்றுநோய்கள் பிரதானமாக காணப்படுகின்றன.
இன்புளூவென்சா தொற்றைக் கட்டுப்படுத்த வீடுகளிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் வயிற்றுப்போக்கு தொற்றை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



