மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற இந்திய வம்சாவளி சமையல் ராணி

லண்டனில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் ராணி மஞ்சு மல்ஹி பங்கேற்றுள்ளார்.
பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடா்ந்து மூத்த மகன் சாா்லஸ் கடந்த நவம்பரில் அரியணையேறினாா்.முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உலக தலைவர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். இந்த விழாவில் இந்திய வம்சாவளி சமையல் ராணி மஞ்சு மல்ஹியும் பங்கேற்றுள்ளார்.
சார்லஸ் முடிசூடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, லண்டன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, பிரிட்டன் பேரரசு பதக்கம் பெற்ற 850 தன்னார்வலர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் ராணி மஞ்சு மல்ஹியும் பங்கேற்றுள்ளார்.
தொற்று காலத்தில் லண்டனில் சமூகத்திற்கு இவரது சிறப்பான சேவையை பாராட்டி சார்லஸின் தாயார் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்திடம் பிரிட்டன் பேரரசு பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



