இம்ரான் கானுக்கு எதிரான 7 வழக்குகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

#Court Order #Pakistan #ImranKhan
Prasu
2 years ago
இம்ரான் கானுக்கு எதிரான 7 வழக்குகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

பாகிஸ்தானில் அரசு கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்றது தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70) மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

அவரை போலீஸார் கைது செய்ய முயன்றபோது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் அவர் மீது 121 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேற்று ஆஜரானார். 

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் சிறப்பு அனுமதியை பெற்று இம்ரான் கான் பேசும்போது, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்றார். இதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. 

எனினும் 7 வழக்குகளில் இம்ரான் கானுக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீனும், மேலும் 2 வழக்குகளில் 5 நாட்கள் ஜாமீனும் வழங்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!