ஈரானில் ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

#Murder #Iran #Soldiers #Terrorist
Prasu
2 years ago
ஈரானில்  ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானின் தெற்கு மாகாணமான குசெஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. அதில் பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். 

திடீரென அந்த பயங்கரவாதிகள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளினர். இதில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 

மேலும் சிறுவன் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த பராஜோல்லா சாப் என்பவரை 2020-ம் ஆண்டு சுவீடனில் வைத்து ஈரான் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் இது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் நேற்று அவர் தூக்கிலிடப்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!