காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 176 பேர் உயிரிழப்பு

#Death #Hospital #Flood #Missing
Prasu
2 years ago
காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 176 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்தது. அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. 

வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 

இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கோவில் வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதைந்தும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், மாயமான 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!