மதுரங்கேணிக்குள ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சனைகளை கேட்டறிந்த சாணக்கியன்

மதுரங்கேணிக்குளம் பிரதேச ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.
எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக கூட்டங்கள் குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டு புனரமைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே வேளை. மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் வேண்டுதலுக்கு அமைய தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டோம்.
குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த எமக்கு ஆதிவாசிகள் சமூகத்தினர் அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்திருந்ததுடன், தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துத்தும் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.
மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சமூகத்தினர் எனக்கும் எமது குழுவினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



