13 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி: காப்பாற்ற நீரில் பாய்ந்த சிறுவனைக் காணவில்லை
#SriLanka
#Death
#NuwaraEliya
#water
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

நுவரெலியா மாவட்டத்தில் மதுரத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்பிட்டிய பெலிஹுல் ஓயாவில் இன்று பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 12 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகளும் மதுரத்த, தபராவ பிரதேசத்தில் வசிப்பவர்கள்.
நீராடும் போது இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியை மீட்க சிறுவன் முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மதுரத்த பொலிசார் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.



