காப்புறுதி பணம் பெறுவதற்காக மனைவியைக் கொலை செய்த கணவன்

#SriLanka #Police #Murder #Accident #Investigation #Lanka4
Prathees
2 years ago
காப்புறுதி பணம் பெறுவதற்காக மனைவியைக் கொலை செய்த கணவன்

காப்புறுதி இழப்பீட்டுத் தொகை 3 கோடி ரூபாயை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொன்ற 25 வயதுடைய நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது நண்பரைப் பயன்படுத்தி குறித்த பெண்ணை வாகன விபத்தில் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிரோஷா உதயங்கனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். பிடிகல மானம்பிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜீப் வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் ஜீப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பிடிகல பொலிஸார் முதலில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​குறித்த ஜீப் வண்டியை உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 பின்னர் இறந்த பெண்ணின் கணவரை mhjypசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இறந்த பெண்ணின் கணவரின் ஆலோசனையின் பேரில் இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணையில், அவர் தனது மனைவி வெளிநாட்டில் இருந்தபோது சம்பாதித்த பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதேவேளை விபத்தை ஏற்படுத்த வந்த ஜீப்பை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!