லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய முக்கிய பயங்கரவாதி பொலிசாரால் சுட்டுக்கொலை

#SriLanka #Police #Murder #Srilanka Cricket #Pakistan #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய முக்கிய பயங்கரவாதி பொலிசாரால் சுட்டுக்கொலை

அல்கொய்தா மற்றும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் கயாரா குழுவைச் சேர்ந்த இக்பால் என்ற பாலி கயாரா 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியை குறிவைத்து தீவிரவாத தாக்குதலை நடத்திய முக்கிய பயங்கரவாதி என பாகிஸ்தான் பொலிசார் உறுதி செய்தனர். 

 பாகிஸ்தானின் ஃபதே மூர் அருகே பொலிசாருடன் நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இலங்கை கிரிக்கெட் அணியை பாதுகாத்து வந்த 7 பொலிஸ் அதிகாரிகள் அங்கு உயிரிழந்தனர்.

 அந்தத் தாக்குதல்களில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலன் சமரவீர, தரங்க பரணவிதான, சமிந்த வாஸ் உள்ளிட்ட 7 வீரர்கள் காயமடைந்தனர்.

பின்னர் போட்டியின் சுற்றுப்பயணம் பாதியில் நிறுத்தப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது. 

 இலங்கை அணி பயணித்த பேருந்தின் சாரதியின் புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான நடத்தை காரணமாக, வீரர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது, இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் கிரிக்கெட் உட்பட அனைத்து சர்வதேச விளையாட்டுகளையும் சர்வதேச சமூகம் நிறுத்தியது.

  இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய பாலி என்ற இக்பால், பாகிஸ்தானில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்ததால், அவரை பிடித்தால் அல்லது கொலை செய்பவருக்கு 10.5 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பொலிசார் அறிவித்து இருந்தனர். 

இந்த குற்றவாளி 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு கொலைகளுக்காக பாகிஸ்தான் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஷியா முஸ்லிம்களை கடத்தியதாக 21 வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!