இலங்கைக்கு புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி!
#SriLanka
#Lanka4
#Medicine
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



