யாழ். வல்வெட்டித்துறையில் இந்திரவிழா வெகு விமர்சை: லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்

வல்வெட் டித்துறை மண்ணின் சிறப்பு நிகழ்வான இந்திரவிழா நிகழ்வு நேற்றிரவு வெகுகோலாகலமாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோயிலின் 15 நாட்கள் திருவிழாவைத் தொடர்ந்து சித்திரை பௌர்ணமி அன்று கடல்நீராட்டுடன் இந்திரவிழா கொண்டாடப்பட்டது.
இதில் வீதிகளில் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் என்பன இடம்பெற்றன.
இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்த வண்ணம் வீதி உலா வந்தனர். இன்று (06.05.2023) அதிகாலையில் முத்துமாரி அம்மன் ஆலயத்தினை வந்தடைந்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முத்துமாரியம்மனின் அருட்காடச்சத்தினை பெற்றுச் சென்றனர். இந்திர விழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சகணக்கில் மக்கள் வல்வெட்டித்துறையை நோக்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இந்திரவிழாவானது வல்வெட்டித்துறை நகரில் நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



