10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடும் தமிழ் மொழிக்கான பேரகராதி

#Tamil #Germany #books
Prasu
3 years ago
10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடும் தமிழ் மொழிக்கான பேரகராதி

ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், 10 கோடி செலவில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது.

செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. 

இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது. இதன் தாக்கமாக, ‘தமிலெக்ஸ்’ எனும் முதல்வகை செவ்வியல் தமிழ் பேரகராதி ஜெர்மனியில் வெளியாக உள்ளது. 

இதற்காக அந்நாட்டின் ஜெர்மனிய அறிவியல் அறிஞர்கள் அகாடமி ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தமிலெக்ஸ் பேரகராதி 24 வருடங்களில் உருவாக்கும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பொறுப்பு, ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் இந்தியா, திபெத் கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய ஓலைச்சுவடிப் பிரிவின் பேராசிரியர் ஈவா வில்டன் என்பவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இவர், தமிலெக்ஸ் பேரகராதி உருவாக்கம் பற்றிய அதிகாரப்பூர்வமானத் தகவலை, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற தமிழ் வருடப் பிறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஈவா வில்டன் கூறும்போது, ‘‘இத்திட்டத்தில் சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான சொல் அகராதி அடங்கும் என்பது போற்றுதலுக்குரியது. இதனால் தற்கால தலைமுறையினர் சங்க இலக்கியங்களையும் எளிமையான முறையில் கற்கும் வாய்ப்பு ஏற்படுவது திண்ணம்’’ என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4