பிரான்ஸில் கைதான குடு அஞ்சு துபாயில் பல வர்த்தகங்களை வழிநடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
#SriLanka
#Arrest
#France
#drugs
#Dubai
Prasu
2 years ago

பிரான்ஸில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்மலானை குடு அஞ்சு, துபாயில் தொழிற்சாலை உட்பட பல வர்த்தகங்களை நடத்தி வருவதாக அந்த நாடுகளின் நம்பகமான வட்டாரங்கள் மூலம் அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குடு அஞ்சு பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருவதாகவும் அதனால் இந்த தொழிற்சாலை வேறு ஒருவரின் பெயரில் நடத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரிய வந்துள்ளது.
துபாயில் தண்ணீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை, ஆரோக்கிய மையம், நவீன உணவகம், கட்டிட வளாகம் என பல நிறுவனங்களும் உள்ளதாக அந்நாட்டின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கட்டிட வளாகத்தை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, குடு அஞ்சுவை நாளை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.



