பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Women
#Bus
Prasu
2 years ago

வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெதுன்கம பிரதேசத்தில் வெலிகமை நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் பலத்த காயங்களுடன் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



