இலங்கையில் மீண்டும் மலேரியா பரவல்: ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
14 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டு பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மலேரியா நோய்தொற்று முற்றாக அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.