உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும்! இலங்கையில் இதுவரை கேள்விக்குறியே

பத்திரிககை சுதந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊடகங்களை மீதான தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் நாள் பத்திரிகை சுதந்திரதினமாக கொண்டாடப்படுகின்றது.
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படைக்கு கொள்கைகளைக் கொண்டாடுவதற்கும் கடமையின் போது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு சந்தர்பமாகவும் அமைக்கின்றது.
2023 ஆம் ஆண்டின் பத்திரிக்கை சுதந்திர தினத்தின் கருப்பொருளாக உரிமைகளின் எதிர்காலத்தை வடிவமைத்தல் மற்ற அனைத்து மனிதவுரிமைகளையும் அனுபவிக்கவும் பாதுகாக்கவும் கருத்துக் சுதந்திரத்தின் செயல்படுத்தும் கூறுகளைப் பற்றி குறிக்கின்றது.
இந்தநிலையில் இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் என்பது இதுவரை கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.
இதுவரை தராக்கி சிவராம், நிமலராஜன் உட்பட பல பத்திரிகையாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



