இலங்கையில் பணிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை!
#SriLanka
#Food
Mayoorikka
2 years ago

இலங்கையில் பேக்கரி உணவுப்பொருளான பணிஸ் ஒன்று 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போதே கிம்புலா பணிஸ் 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பணிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிஸ் 2 அடி நீளம், 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்டது.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்றினால் பெருந்தொகை பணத்திற்கு, கிம்புலா பனிஸ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



