டெங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு: சுகாதார திணைக்களம்
#SriLanka
#Health
#Health Department
#Dengue
Mayoorikka
2 years ago
இலங்கையில் மூன்று வகையான டெங்கு வைரஸ் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவருக்கு இரண்டு நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் எனவும் காதார திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
காய்ச்சல் வந்தால், இரண்டாவது நாளில் கண்டிப்பாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். டெங்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு தாமதமாக வரும் பட்சத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த மூன்றரை மாதங்களில், நாட்டில் 29,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுமார் 15 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் காதார திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.