சூடானில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான சூடான் இராணுவத்தினருக்கும் அந்நாட்டு இடைக்கால இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களால் 100,000க்கும் அதிகமான மக்கள் சூடானில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரவில்லை என்றால் சூடானில் பேரழிவு நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சூடானில் மோதல் காரணமாக மேலும் 334,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் சூடானின் தலைநகரான கார்ட்டூமில் இராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் தொடர்கின்றன.
எவ்வாறாயினும், நிலையான மற்றும் நம்பகமான போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக சூடானுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி வோல்கர் பெர்தெஸ் தெரிவித்தார்.
சூடானின் இராணுவம் மற்றும் இடைக்காலப் படைகள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டால், மோதல் தொடங்கிய பின்னர் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.



