இலங்கையில் சேவை விநியோக நிலையமொன்றை நிர்மாணிக்கும் சீன நிறுவனம்

#SriLanka #Sri Lanka President #China #Investment #Import
Mayoorikka
2 years ago
இலங்கையில் சேவை விநியோக நிலையமொன்றை நிர்மாணிக்கும் சீன நிறுவனம்

சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான பிரதான நிறுவனம் ஒன்று இலங்கையில் 02 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சேவை விநியோக நிலையமொன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 சைனா மெர்ச்சன்ட்ஸ் குரூப் (CMG) கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய சேவை விநியோக மைய வளாகத்தில் முதலீடு செய்ய உள்ளது, இதன் கட்டுமான செலவு மட்டும் 392 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததன் பின்னர் இலங்கைக்கு கிடைத்த முக்கிய வெளிநாட்டு முதலீடாக இது கருதப்படுகிறது.

 இந்த சேவை விநியோக மையத் திட்டம் இலங்கையில் சைனா மேர்ச்சன்ட்ஸ் குழுமத்தின் முதலீட்டை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்லும் என்றும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக இது அமையும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட மையமாக 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இது தவிர அம்பாந்தோட்டை துறைமுக வளாகமும் சைனா மெர்ச்சன்ட்ஸ் குரூப் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!