சேற்றில் சிக்கிய பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹெலிகாப்டர்

#India #D K Modi #Helicopter #Tamilnews
Prasu
3 years ago
சேற்றில் சிக்கிய பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஹெலிகாப்டர்

பிரதமர் மோடி நேற்று சித்ரதுர்கா, விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை,ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் ஆகிய இடங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.

சித்ரதுர்கா பிரசார கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் ெதாகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க சிந்தனூரில் உள்ள ஒரு வயல் வெளியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டு இருந்தது. 

அந்த மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி வந்திறங்கினார். அவரது ஹெலிகாப்டருடன் 3 ராணுவ ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு வீரர்கள் வந்தனர்.

பிரதமரின் ஹெலிகாப்டர் தறையிறங்கியதும், பிரதமர் மோடி பிரசார மேடைக்கு சென்றார். அந்த சமயத்தில் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி, ஹெலிபேடு மைதானத்தில் ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டது. 

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வந்ததால், தரைப்பகுதி ஈரப்பதமாக இருந்தது. அப்போது ஒரு பாதுகாப்பு ஹெலிகாப்டர் திடீரென்று ஈரமாக இருந்த சேற்றில் சிக்கி அதன் அடிப்பாகம் புதைந்தது. அதாவது ஹெலிகாப்டர் எடை தாங்காமல் இந்த சம்பவம் நடந்தது. 

இதை கவனித்த பைலட் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அந்த ஹெலிகாப்டரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4